தமிழ் ஓசை
தமிழ் ஓசை

நாட்டில் மேலும் 538 பேருக்கு கொரோனா

0 95

நாட்டில் மேலும் 538 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர்  தெரிவித்தார்.

இதற்கமைய, இலங்கையில்  இதுவரை கொவிட் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 46 ஆயிரத்து 473 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து மேலும் 6,689 பேர் பூரணமாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றிலிருந்து பூரணமாகக் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5, 22,184 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளாகி மேலும் 17 பேர் உயிரிழந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.