Developed by - Tamilosai
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 29 பேர் உயிரிழந்ததாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் 12 ஆண்களும், 17 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.
அந்த வகையில், 30 வயதுக்குட்பட்டவர்களில் ஆண் ஒருவரும், 30 முதல் 59 வயதுக்கிடைப்பட்டவர்களில் 02 ஆண்களும், 04 பெண்களுமாக 06 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 09 ஆண்களும், 13 பெண்களுமாக 22 பேரும் உயிரிழந்தனர்.
இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 13 ஆயிரத்து 640 ஆக உயர்வடைந்தமை குறிப்பிடத்தக்கது.