தமிழ் ஓசை
தமிழ் ஓசை

நாட்டில் மேலும் 23 பேர் கொரோனாவுக்குப் பலி!

0 68

 நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மேலும் 23 பேர் உயிரிழந்ததாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இவர்கள் அனைவரும் நேற்றைய தினம் உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, இலங்கையில் கொவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 995 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 5,49,500 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து மேலும் 426 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5,23,929 ஆக அதிகரித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.