தமிழ் ஓசை
தமிழ் ஓசை

நாட்டில் முடக்கமே தீர்வாக அமைய வாய்ப்பு – சுகாதாரத் தரப்பு எச்சரிக்கை

0 175

கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்தால் நாட்டை மீண்டும் முடக்குமாறு பரிந்துரை செய்வதைத் தவிர சுகாதாரத் துறைக்கு வேறு வழியில்லை என பிரதிச் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு மற்றும் பொதுமக்களின் போராட்டங்களால் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

தற்போது சுகாதார வழிகாட்டுதல்கள் சரியான முறையில் பின்பற்றப்படவில்லை எனவும், கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளியால் ஒரே நாளில் அதிகளவானோருக்கு கொரோனா வைரஸ் பரவக்கூடிய வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.