Developed by - Tamilosai
நாட்டில் இன்று 723 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய, இலங்கையில் இதுவரை கொவிட் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 48 ஆயிரத்து 784 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து மேலும் 333 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 23 ஆயிரத்து 122 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளாகி மேலும் 23 பேர் உயிரிழந்ததாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 950 ஆக அதிகரித்துள்ளது.