Developed by - Tamilosai
நாட்டில் மீண்டும் மக்கள் அரசாங்கத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் கொழும்பில் இன்று இடம்பெற்ற பேரணியின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு மக்களைத் துன்பத்தில் இருந்து மீட்பதற்காக நாம் இந்த மக்கள் பேரணியை நடத்துகிறோம்.
இந்த நாட்டினுள் சர்வாதிகாரத்திற்கு நாம் இடமளிக்க மாட்டோம்.
இறையாண்மையுள்ள நாட்டில் கருத்து சுதந்திரம் உள்ளது.
வீழ்ச்சியடையும் பொருளாதாரத்தை, வீழ்ச்சியடைந்த சமூகத்தை, மீண்டும் கட்டியெழுப்பி இந்த நாட்டில் மீண்டும் மக்கள் அரசாங்கத்தை கொண்டு வருவோம்.
இந்நாட்டு மக்கள் நாட்டின் பொறுப்பை ஐக்கிய மக்கள் சக்திக்கு பெற்றுக் கொடுப்பார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.