தமிழ் ஓசை
தமிழ் ஓசை

நாட்டில் பண அச்சகமொன்றை நிறுவக்கூடிய கையாளாகாத நிலையில் அரசாங்கம்: சஜித் சாடல்

0 140

பொருளாதார ரீதியில் நாடு நாளுக்கு நாள் வங்குரோத்து நிலைக்குத் தள்ளப்பட்டுக்கொண்டிருக்கிறது.
எதிர்காலத்தில் பணம் அச்சிடும் அச்சகமொன்றை அரசாங்கம் நிறுவினாலும் அது குறித்து புதுமைப்படுவதற்கு ஒன்றும் இல்லை.
அந்தளவுக்கு அரசாங்கம் கையாளாகாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கடுமையாகச் சாடியுள்ளார்.

திஸ்ஸமஹாராமவில் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான  அலுவலகத்தை திறந்து வைக்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை எதிர்க்கட்சித் தலைவர் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் நாட்டுக்கு எற்படுத்தியுள்ள நிலையை அவதானிக்கின்ற போது  ‘நன்றாக இருந்த நாடும் வீழ்ச்சியடைந்துள்ள இடமும்’ என்று கூறத்தோன்றுகிறது.

இந்த அரசாங்கம் முழு நாட்டையும் பாதாளத்தில் தள்ளியுள்ளது. பாண் ஒன்றை வாங்குவதற்குக் கூட தள்ளுவண்டியொன்று நிறைய பணம் கொண்டு செல்ல வேண்டிய நிலையொன்று வெகுவிரைவில் உருவாகும்.

நாளுக்கு நாள் பொருளாதார ரீதியில் நாடு வங்குரோத்து நிலைக்குத் தள்ளப்பட்டுக்கொண்டிருக்கிறது. எதிர்காலத்தில் பணம் அச்சிடும் அச்சகமொன்றை அரசாங்கம் நிறுவினாலும் அது குறித்து புதுமைப்படுவதற்கு ஒன்றும் இல்லை. அந்தளவுக்கு அரசாங்கம் கையாளாகாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

விவசாயிகள் அவர்களின் விளைநிலங்களை கைவிட்டு செல்கின்ற நிலைக்கும் அவ்வாறு கைவிடப்பட்ட அந்த விளைநிலங்களை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பன்னாட்டு நிறுவனங்களுக்கு அரசாங்கமே வழங்குகின்றது.

அத்தோடு உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு மீண்டும் தலைதூக்க முடியாத நிலை ஏற்படுகிறது என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.