Developed by - Tamilosai
தினமும் கிடைக்கும் வருவாயை கொண்டு நடத்தப்படும் அரசாங்கமாக தற்போதைய அரசாங்கம் மாறியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பின் முதல் நாள் விவாதத்தில் நேற்று கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் தனியார் சேமிப்பு மாத்திரமல்லாது அரசாங்கத்தின் வருமானமும் வீழ்ச்சியடைந்துள்ளது . உண்மையில் நோக்கும் போது நாட்டுக்கு கிடைக்கும் வருமானத்தை விட செலவுகள் அதிகம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டில் உற்பத்திகளை விட நுகர்வு அதிகரித்துள்ளது. இந்த பிரச்சினைக்கு இம்முறை வரவு செலவுத்திட்டத்தில் பதில் வழங்கப்படவில்லை.
இதனால், நிதி சமன் இன்மைக்கு தீர்வு வழங்க அரசாங்கம் தவறியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் அரசாங்கம் இதனை செய்யவில்லை என்பதுடன் வரவு செலவுத்திட்டத்திலும் அதனை செய்யவில்லை.
இதற்கான நிரந்தர கொள்கை வரையறை அவசியம் ஆனால் அப்படியான கொள்கை வரையறையும் அரசாங்கத்திடம் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.