தமிழ் ஓசை
தமிழ் ஓசை

நாட்டில் டெங்கு நுளம்பின் பெருக்கம் அதிகரிப்பு – 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளர்கள் அடையாளம்!

0 150

நாட்டில்  நிலவும் சீரற்ற காலநிலையால்  மீண்டும் டெங்கு நுளம்பு பெருக்கம் அதிகரித்துள்ளதாகத் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

நாட்டில் இந்த ஆண்டு கடந்த 4 ஆம் திகதிவரை 22 ஆயிரத்து 902 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேநேரம், மேல் மற்றும் கிழக்கு மாகாணங்களில் 59 அதிக அபாயமிக்க வைத்திய அதிகாரி பிரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த வைத்திய அதிகாரி பிரிவுகளில் இன்று முதல் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பதில் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.