தமிழ் ஓசை
தமிழ் ஓசை

நாட்டில் கஞ்சா பயிரிட வேண்டும் – சபையில் கோரினார் டயனா

0 87

நாட்டில் கஞ்சா பயிரிடுவதன் மூலம் அந்நியச் செலாவணியை ஈட்ட முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் டயனா கமகே சபையில் இன்று தெரிவித்துள்ளார்.

2022ஆம் ஆண்டுக்கான வரவு –  செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான மூன்றாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்; 

“2025 ஆம் ஆண்டளவில் கஞ்சாவுக்கான உலக சந்தை மதிப்பு 8.6 பில்லியன் அமெரிக்க டொலர் முதல் 10.5 பில்லியன் அமெரிக்க டொலர் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

 இலங்கையில் பெரும்பாலான மருந்துவ பயிர்களை முறையாகப் பயிரிட்டு, ஏற்றுமதி செய்து, அந்நியச் செலாவணியைப் பெற முடியும்.

 நாம் சர்வதேச நாணய நிதியத்திற்குச் செல்ல வேண்டியதில்லை. யாரிடமும் கடன் வாங்க வேண்டிய அவசியமில்லை. 

தேயிலை, இறப்பர், தெங்கு போன்றவற்றுக்கு கடந்த காலங்களில் சர்வதேச அரங்கில் காணப்பட்ட கிராக்கி தற்பொழுது கிடையாது. 

கஞ்சா செய்கையில் ஈடுபட்டு அவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தால் சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெற்றுக் கொள்ளத் தேவையில்லை. 

இயற்கை வளங்களைச் சரியான முறையில் பயன்படுத்துவதன் மூலம் நாட்டுக்குப் பாரிய பொருளாதார நலன்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.