Developed by - Tamilosai
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களின் சில இடங்களிலும் இடைக்கிடையே பலத்த மழை பெய்யக்கூடுமென எதிர்வுக்கூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள சிவப்பு அறிவித்தலில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
தென்மேற்கு பிராந்தியத்தில் மழையுடனான வானிலை அதிகரித்துள்ளதன் காரணமாக பல இடங்களில் 100 மில்லிமீற்றருக்கு அதிக மழைவீழ்ச்சி பதிவாகி வருகின்றது
மணிக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும் என்பதுடன், 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, பலத்த மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மின்னல்தாக்கம், மரங்கள் முறிந்து விழுதல் உள்ளிட்ட அனர்த்தங்கள் குறித்து அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தல் விடுக்க்பட்டுள்ளது.
இதேவேளை, கொழும்பு, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை, மாத்தறை, நுவரெலியா, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது.
தொடர்ந்துவரும் அதிக மழையுடனான வானிலைக்காரணமாக சில ஆறுகள் பெருக்கெடுத்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.