Developed by - Tamilosai
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு கண்டிப்பாக வரும்! மின்சாரத் தடைகள் ஏற்படும் ! நாட்டை கட்டியெழுப்ப முடியாது எனவும் கூறினார். – டில்வின் சில்வா.
அடுத்தவருடத்தில் உண்பதற்கு உணவு கூட கிடைக்காத நிலையொன்று ஏற்படும் இதனை தடுப்பதற்கு அரசாங்கத்திடம் எந்தவிதமான திட்டங்களும் இல்லை!
அடுத்தவருடத்தில் நாட்டு மக்களுக்கு உண்பதற்கு உணவுக்கூட கிடைக்காத நிலையொன்று ஏற்படும் என தெரிவிக்கும் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா,
இதனை தடுப்பதற்கு அரசாங்கத்திடம் எந்தவிதமான திட்டங்களும் இல்லை என்றார்.
இது தொடர்பில் மேலும்தெரிவித்த அவர்இ அடுத்த வருடம் நாட்டு மக்களுக்கு உணவுக்கூட வழியில்லாத நிலையொன்று ஏற்படப்போவது நன்கு தெரிகிறது.
எனினும் இதனை தடுப்பதற்கு அரசாங்கத்திடம் எந்தவொரு வேலைத்திட்டங்களும் இல்லை என்றார்.
இதற்கு முன்னர் நாட்டை ஆட்சி செய்தவர்கள்இ ஆட்சியதிகாரத்தில் உயர் பதவிகளை வகித்தவர்களுடன் ஒன்றாக இணைந்து நாட்டை கட்டியெழுப்பு முடியாது எனவும்,
தேர்தல்காலங்களில் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக திருட்டுக் கூட்டணிகளை அமைத்து நாட்டை கட்டியெழுப்ப முடியாது எனவும் கூறினார்.
அடுத்த வருடம் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு கண்டிப்பாக வரும். இதனால் மின்சாரத் தடைகள் ஏற்படும் எனவும் கூறினார்.