தமிழ் ஓசை
தமிழ் ஓசை

“நாட்டில் எரிபொருளுக்குத் தட்டுப்பாடு ஏற்படக்கூடும்”

0 174

மக்கள் அவசியமின்றி எரிபொருளைச் சேமிப்பதால் நாட்டில் தற்காலிகமாக எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தைத் திறக்குமாறும், மசகு எண்ணெய்யை நாட்டுக்கு கொண்டுவருமாறும் எரிபொருள் கூட்டுத்தாபன தொழிற்சங்க ஒன்றியம் போராட்டம் நடத்தியிருந்தது.

அந்நியச் செலாவணியைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக மசகு எண்ணெய் இறக்குமதி தடைசெய்யப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டம் செய்ததும் டொலர் அதிகரித்து எம்மால் மசகு எண்ணெய்யைக் கொள்வனவு செய்வதற்கு வாய்ப்பு கிடைக்குமென எனக்கு ஆரம்பத்திலேயே தெரிந்திருந்தால் நானும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருப்பேன்.

காரணம் மசகு எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டு சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகளை ஆரம்பிக்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு.

உலக நாடுகள் எரிபொருள் நெருக்கடியை சந்தித்துள்ள இவ்வாறானதொரு சூழ்நிலையில் இலங்கையில் எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தப்படவில்லை.

இதுதொடர்பில் தொழிற்சங்கங்கள் மாத்திரமல்ல ஒட்டுமொத்த மக்களும் மகிழ்ச்சியடைய வேண்டும். அதேபோன்று தொடர்ச்சியான மழைவீழ்ச்சி கிடைப்பதால் மின் உற்பத்திக்காக மின்சார சபையும் எம்மிடம் அதிகளவு எரிபொருள் கொள்வனவு செய்வதில்லை.

தற்போதும் நாங்கள் வரையறுக்கப்பட்ட டொலர் ஒதுக்கீடு செய்து  நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட மசகு எண்ணெய்யினால் தயாரிக்கப்பட்ட  13,500 எரிபொருளை பயன்படுத்தாமல் தாங்கிகளில் சேமித்து வைத்துள்ளோம்.

அதனால், மசகு எண்ணெய் இறக்குமதியை நிறுத்துவதால் மின்தடை ஏற்படும் என்பது பொய்யாகும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.