Developed by - Tamilosai
உணவுக்காக இலங்கையில் இன்னமும் பெரிதாக கலவரம் ஏற்படவில்லை. ஆனால் அதற்கான சூழல் விரைவாக ஏற்பட்டு வருகிறது என பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
பெட்ரோல், மண்ணெண்ணெய் , சமையல் எரிவாயு போன்றவற்றுக்காக மக்கள் மோதிக்கொள்ளத் தொடங்கி விட்டார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வரிசைகளில் நான் முந்தி, நீமுந்தி என்றும், பெற்றோல் தீர்ந்து விட்டால்,
பெற்றோல் நிலைய ஊழியர்களைத் தாக்குவது என்றும், பெற்றோல் கொண்டு வரும் லொறிககளை நிறுத்தி குழப்பம் விளைவிப்பது என்றும், சமையல் எரிவாயு கலன்களை கொண்டு வரும் லொறியை நிறுத்தி, கலன்களை அடாத்தாக தூக்கிச்
செல்வது என்றும் கலவரங்கள் ஏற்பட ஆரம்பித்துவிட்டன .
பெற்றோல் ஒழுங்காக விநியோகிக்கவில்லை என கூறி பெற்றோல் நிலைய உரிமையாளர் ஒருவரின் வீடு தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள்,
பொலிஸார் மோதல் பரவலாக ஏற்படுகிறது. முதல் மோதலில் பொலிஸ் சுட்டதில்
ஒருவர் இறந்தார். பலர் காயமடைந்தனர். இதனால் பொலிஸ் மீது கடும் விமர்சனம் எழுந்தது.
பொதுவாக உலகில் நல்ல பெயர் இல்லாத ஸ்ரீலங்கா பொலிஸாரும், இராணுவத்தினரும் இப்போது அசாத்திய பொறுமைகாக்கின்றனர். இப்படியே போனால் மக்கள், கடைகள் வர்த்தக அங்காடிகள் உடைப்பது போன்ற நிலைமைகளும் ஏற்பட வாய்ப்புண்டு. அப் போது ஸ்ரீலங்கா பொலிஸ், இராணுவம் பொறுமை காக்குமா அல்லது சுடுமா அல்லது மக்களுடன் சேர்ந்து புரட்சி செய்யுமா என்று பல ஊகங்கள் நாட்டுக்குள்ளே உலவத் தொடங்கிவிட்டன என பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.