தமிழ் ஓசை
தமிழ் ஓசை

நாட்டில் இரு தடுப்பூசிகள் இல்லை

0 36

மஞ்சள் காய்ச்சல் மற்றும் மூளைக்காய்ச்சல் ஆகியவற்றுக்கான தடுப்பூசிகள் நாட்டில் இல்லை என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆபிரிக்க பிராந்தியத்தில் தொழில் நிமித்தம் செல்வோருக்கு மஞ்சள் காய்ச்சலுக்கான தடுப்பூசிகளும் மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கு பயணிப்போருக்கு மூளைக்காய்ச்சலுக்கான தடுப்பூசிகளும் ஏற்றப்படுகின்றன.

குறித்த தடுப்பூசிகள் இல்லாமையால், உலக சுகாதார ஸ்தாபனத்திடம் இருந்து அந்த தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள முயற்சித்த போதிலும் அது வெற்றியளிக்கவில்லை.

தடுப்பூசிகளுக்காக ஒப்பந்தம் செய்துகொண்ட விநியோகஸ்தரால் சரியான முறையில் தடுப்பூசிகளை வழங்கப்படாத காரணத்தினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதற்கிணங்க, குறித்த விநியோகஸ்தரிடமிருந்து விரைவில் தடுப்பூசியை இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் எதிர்வரும் வாரங்களுக்குள் கிடைக்கப்பெறும் என்றும் தெரியவருகிறது.

Leave A Reply

Your email address will not be published.