Developed by - Tamilosai
எரிவாயுவை தாங்கி கப்பல் எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை இலங்கையை வந்தடையும் என லிட்ரோ நிறுவனத் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் எதிர்வரும் திங்கட் கிழமை முதல் எரிவாயு விநியோகத்தை முன்னெடுக்கக் கூடியதாக இருக்கும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
நேற்றையதினம் இலங்கைக்கு வரவிருந்த 3,500 மெட்ரிக் டன் எரிவாயு தாங்கிய கப்பல், நாட்டுக்கு வருவதற்கு மேலும் தாமதமாகும் எனவும் குறித்த கப்பல் எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்காக இந்தியாவுக்கு சென்றுள்ளதாகவும் லிட்ரோ நிறுவனம் நேற்று அறிவித்திருந்தது.
இன்று சமையல் எரிவாயு விநியோகம் இடம்பெறமாட்டாது எனவும் பொதுமக்கள் வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் எனவும் லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.