தமிழ் ஓசை
தமிழ் ஓசை

நாட்டின் பாதுகாப்பு நன்மைக்கு எதிராகவும் எங்கள் நாட்டை பயன்படுத்த அனுமதிக்கமாட்டோம் -பீரிஸ்

0 337

இலங்கையில் சீனாவின் நடவடிக்கைகள் குறித்து இந்தியா கரிசனை அடைந்துள்ளது – குறிப்பாக சீனா வடபகுதி மீனவர்களை நெருங்குவது குறித்து கரிசனை கொண்டுள்ளது. எனினும் இந்த அச்சங்கள் தேவையற்றவை என வெளிவிவகார அமைச்சர் ஜி எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்கு இரண்டு நாள் விஜயமாக சென்றிருந்த பீரிஸ் ‘டைம்ஸ் ஒவ் இந்தியாவிற்கு அளித்த பேட்டியின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.அதில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு,

தவறான அனுமானங்களின் அடிப்படையில் சீனா குறித்த கேள்விகள் எழுகின்றன என தெரிவித்துள்ள இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் சீனாவின் திட்டங்கள் காணப்படுகின்றது என்றால் இந்தியாவின் உதவியுடன் முன்னெடுக்கப்படும் திட்டங்களும் காணப்படுகின்றன என தெரிவித்துள்ளார்.

புதிய பட்டுப்பாதை திட்டத்தினால் இலங்கை பயனடைந்துள்ளது ஆனால் அதனால் யாருக்கும் பாதிப்பு ஏற்படாதவண்ணம் அதனை கையாண்டுள்ளோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடன்பொறி என்பது உருவாக்கப்பட்ட ஒரு புனைகதை சீனாவிடமிருந்தோ அல்லது வேறு எந்த நாட்டிடமிருந்தோ நாங்கள் கடன்களை பெறும்போது திருப்பி செலுத்துவது குறித்த சிறந்த யோசனையுடனேயே அதனை பெறுகின்றோம் என தெரிவித்துள்ளார். 2015 இல் அரசாங்கம் மாறியவேளை நாங்கள் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கான மூன்றில் ஒரு வீத கடனை செலுத்தியிருந்தோம் என தெரிவித்துள்ள இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் இலங்கை கடனிலிருந்து மீளமுடியாத அதன் சொத்துக்கள் இன்னொரு நாட்டிற்கு செல்லக்கூடிய ஆபத்து ஒருபோதும் காணப்பட்டதில்லை என தெரிவித்துள்ளார்.

எந்த நாட்டின் பாதுகாப்பு நன்மைக்கு எதிராகவும் எங்கள் நாட்டை பயன்படுத்த அனுமதிக்கமாட்டோம் என குறிப்பிட்டுள்ள அவர் குறிப்பாக இந்தியாவிற்கு நலன்களிற்கு எதிராக எங்கள் நாட்டை பயன்படுத்த அனுமதிக்கமாட்டோம் எனவும் தெரிவித்துள்ளார்.

சீனா இலங்கையின் வடபகுதியில் காலடி எடுத்துவைக்க முயல்வது குறித்து கருத்து வெளியிட்டுள்ள வெளிவிவகார அமைச்சர் சீனாவின் தூதுவரின் வடபகுதி விஜயம் சிவில் சமூகத்தினரை சந்தித்தது மீனவர்களை சந்தித்தது போன்றவற்றை இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கையாக கருதக்கூடாது என தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.