தமிழ் ஓசை
தமிழ் ஓசை

நாட்டின் சுதந்திரத்தை பாதுக்காக அனைவரும் முன்னிற்க வேண்டும்

0 256

நாட்டுக்காக தம்மை அர்ப்பணித்து, இராணுவத்தினர் பெற்றுத்தந்த சுதந்திரத்தை பாதுகாக்க தற்காலத் தலைவர்களும், எதிர்காலத் தலைவர்களும் முன்னிற்க வேண்டும் எனப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்தில் நிர்மாணிக்கப்பட்ட சந்தஹிரு சேய தூபியை திறந்துவைக்கும் நிகழ்வில் நேற்று(18) கலந்துகொண்டு உரையாற்றியபோது பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டுக்காக மிகக் கடுமையான தீர்மானங்களை மேற்கொண்டு, அவற்றில் வெற்றியடைந்த சந்தர்ப்பங்களில் நான் மிக மகிழ்ச்சி அடைந்துள்ளேன்.

நாட்டின் பாதுகாப்புக்காக மாத்திரமே நாம் யுத்தம் செய்தோம். ஒவ்வொரு ஜனாதிபதியும் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முயற்சித்தனர்.

ஜே.ஆர். ஜெயவர்த்தன திம்புவில் வட்டமேசை விவாதங்களை நடத்தியது நினைவிருக்கிறது. ஆர்.பிரேமதாசவின் காலத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள்கூட வழங்கப்பட்டன.

பின்னர் சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் ஆட்சிக் காலத்தில் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக சில கலந்துரையாடல்களும் இடம்பெற்றன.

அதன்பின்னர் ரணில் விக்கிரமசிங்கவின் காலப்பகுதியில் புலிகளின் கட்டுப்பாட்டிற்கு தனியான பகுதிகள் ஒதுக்கப்பட்டன.

அவர்கள் எவருக்கும் நமது பாதுகாப்புப் படைமீது நம்பிக்கை இல்லை.

ஒரு நாட்டின் பாதுகாப்புப் படைமீது நம்பிக்கை இன்றேல், அந்த நாட்டின் தேசிய பாதுகாப்பை இழக்க நேரிடும் என்றே அனைவரும் நம்புகிறார்கள்.

அதே போன்று, எமது இராணுவத்தை மறந்துவிட்டு, வெளிநாட்டுப் படைகளையும், வெளிநாட்டுத் தலையீடுகளையும் அனுமதித்தால், தற்போதும் எமது நாட்டில் இரத்த வெள்ளமே பாயும் எனப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.