தமிழ் ஓசை
தமிழ் ஓசை

நாட்டின் கடும் நெருக்கடி காரணமாக நாட்டைவிட்டு அகதிகளாக வெளியேறிய அறுவர்

0 430

இலங்கையில் தொடர் விலையேற்றம், பொருட்களுக்கான தட்டுப்பாடு மற்றும் வருமானம் இன்மையால் நான்கு மாத கைகுழந்தையுடன் ஆறு இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகம், தனுஸ்கோடி சென்றுள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக இங்கு வசிக்கும் மக்கள் உணவு, அத்தியாவசிய தேவைகளுக்காக கடுமையான சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

இதனால் நாட்டில் வாழும் தமிழர்கள் தமிழகத்திற்கு அகதிகாளக வர தொடங்கியுள்ள நிலையில் இன்று அதிகாலை நான்கு மாத கை குழந்தையுடன் ஆறு இலங்கை தமிழர்கள் அகதிகளாக தனுஸ்கோடி சென்றுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தனுஷ்கோடி இலங்கைக்கு அருகே உள்ளதால் இலங்கை தமிழர்கள் இறுதிகட்ட போரின்போது அகதிகளாக தனுஷ்கோடி வழியாக தமிழகத்திற்குள் வந்த இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் தங்கியுள்ளனர்.

இதே போல் தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக உணவு மற்றம் அத்தயாவசிய பொருட்கள் கடும் விலை ஏற்றம் மற்றும் அத்தியவசிய பொருட்களின் தட்டுபாடுகள் அதிகமாக உள்ளதால் இலங்கை தமிழர்கள் இந்தியாவிற்கு அகதிகளாக வரக்கூடும் என்பதால் சர்வதோச கடல் எல்லை பகுதியில் கண்காணிப்பை தீவிர படுத்த வேண்டும் என கடலோர் பாதுகாப்பு குழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்ததது.

இந்நிலையில் நேற்று இரவு மன்னார் மாவட்டம் பேசாலை கடற்கரையில் இருந்து மன்னாரை சேர்ந்த கஜேந்திரன், மேரிகிளாரி, நிசாத், கியூரி, எஸ்தர்,மோசஸ் உள்ளிட்ட நான்கு மாத கைகுழந்தையுடன் ஆறு பேர் ஒரு பைப்பர் படகில் புறப்பட்டு இன்று அதிகாலை சுமார் 1 மணி அளவில் தனுஷ்கோடி அடுத்துள்ள நான்காம் மணல்திட்டு பகுதியில் வந்து இறங்கி உள்ளனர்.

தகவலறிந்து இலங்கை தமிழர்களை அழைத்து வர மண்டபம் கடலோர காவல்படை முகாமிற்கு சொந்தமான ஹேவர்கிரப்ட் கப்பல் விரைந்துள்ளது. மணல் திட்டில் காலை முதல் குடிநீர் மற்றும் உணவு இல்லாமல் தவித்து வரும் ஆறு தமிழக இலங்கைத் தமிழர்களை மீட்டு இந்திய கடலோர காவல் படையினர் மண்டபம் முகாமுக்கு அழைத்து வந்தனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக ஏற்பட்டுள்ள அத்தியவாசிய பொருட்களான அரிசி, பருப்பு, கோதுமை விலைஏற்றம் மற்றும் மண்ணெய், டீசல்,பெட்ரோல் உள்ளிட்ட பொருட்களான தட்டுபாடு அதிகரித்முள்ளதால் இந்த ஆறு இலங்கை தமிழர்கள் தமிழகத்துக்கு அகதிகளாக வந்தார்களாதாக பாதுகாப்பு வட்டார அதிகாரிகள் நடத்திய விசாரணையில் இலங்கை தமிழர்கள் தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்பு வட்டார அதிகாரிகளின் விசாரணைக்கு பின் அனுமதி இன்றி தமிழகத்துக்குள் நுழைந்ததால் ஆறு இலங்கை தமிழர்கள் மீது வழக்கு பதிவு செய்த மெரைன் பொலிஸார், ராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைப்பார்கள் என தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.