Developed by - Tamilosai
வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர அவர்கள் நாளை முதல் நாடு முழுவதும் 95 ஒக்டென் பெட்ரோல் பெற்றுக் கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளார்.
இன்று முதல் நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு இரண்டு கப்பல்களில் இருந்து தரையிறக்கப்பட்டுள்ள 95 ஒக்டென் பெட்ரோல் வழங்கப்பட்டு வருகிறது.
95 ஒக்டென் பெட்ரோல் பாவனையாளர்கள், 92 ஒக்டென் பெட்ரோலுக்காக வரிசையில் காத்திருக்க வேண்டாம் என்றும் நாளை எரிபொருள் நிரப்பு நிலையங்களில் 95 ஒக்டென் பெட்ரோலை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.