தமிழ் ஓசை
தமிழ் ஓசை

நாடு முழுவதும் அதிகரித்த வேகத்தில் பலத்த காற்று வீசும்!

0 94

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சில இடங்களில் 50 மில்லி மீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். 

மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.
அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. அநுராதபுரம் மாவட்டத்தில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாடு முழுவதும் மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்
அநுராதபுரம் – சிறிதளவில் மழை பெய்யும்.

மட்டக்களப்பு – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்
கொழும்பு – அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

காலி – அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்
யாழ்ப்பாணம் – மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்
கண்டி – அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

கண்டி – அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்
நுவரெலியா – அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்
இரத்தினபுரி – அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

திருகோணமலை – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்.
மன்னார் – அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.