Developed by - Tamilosai
தடுப்பூசி செலுத்தப்பட்ட போதிலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு மற்றும் இறப்புக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், நாடு இருண்ட காலகட்டத்தை நோக்கிச் செல்வதாக சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் அன்வர் ஹம்தானி எச்சரித்துள்ளார்.
அதிகளவான கொரோனா நோயாளிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
176 மொத்த சிகிச்சை மையங்களில் 30 சதவீதம் தற்போது ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன எனவும் அவர் கூறினார்.
இது எச்சரிக்கை மணியை ஒலிக்க வைக்கிறதென்றும் நிலைமை மோசமடைவதற்கு முன்பு அதைக் கட்டுப்படுத்துவது கட்டாயமாகும்.
மேலும் அவ்வாறு இல்லையெனில், சில மாதங்களுக்கு முன்பு இருந்த இருண்ட காலகட்டத்திற்கு நாடு செல்லுமென்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, நாடு கட்டுப்படுத்தப்பட்ட சூழ்நிலையை அடைய வேண்டுமானால், சுகாதார வழிகாட்டுதல்கள் மற்றும் நடைமுறைகளைக் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் மக்களை வலியுறுத்தினார்.