Developed by - Tamilosai
நாடாளுமன்றத்துக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தின் போது இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் பொலிஸ் மா அதிபரிடமிருந்து முழுமையான அறிக்கை கோர இருப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று (06) தெரிவித்தார்.
முடியுமாக இருந்தால் எதிர்வரும் திங்கட்கிழமை முற்பகல் 10.00 மணிக்கு கட்சித் தலைவர்களின் கூட்டம் நடத்தப்படும் எனவும், முடிந்தால் அதே வாரம் அல்லது 17ஆம் திகதி நாடாளுமன்றம் கூடும் எனவும் சபாநாயகர் தெரிவித்தார்.
மேலும், இச்சம்பவம் தொடர்பில் கவலை தெரிவித்த அவர், அமைதியான முறையில் போராட்டம் நடத்துமாறும் கோரிக்கை விடுத்தார். இந்த சம்பவம் தொடர்பில் அக்கறை கொண்ட அனைவருக்கும் சபாநாயகர் நன்றி தெரிவித்தார்.
நாடாளுமன்ற சந்தியில் ஆர்ப்பாட்ட நடத்துவோர் மீது தாக்குதல் நடத்தப்படுவதாகவும் சபாநாயகரை அவசரமாக சபைக்கு வருமாறும் எதிரணி சபையில் கோரியது . அடுத்த வாரம் பாராளுமன்றத்தை கூட்டுமாறும் எதிரணி கோரியது.இதனை தொடர்ந்து ஏற்பட்ட குழப்ப நிலையை அடுத்து சபைக்கு வருகை தந்த சபாநாயகர் இதனை தெரிவித்தார்.