தமிழ் ஓசை
தமிழ் ஓசை

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்படும்

0 230

74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அரசாங்க தகவல் திணைக்களம் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதன்படி பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி நடைபெறவுள்ள சுதந்திர தின நிகழ்வுகள் விசேட நிகழ்வாகக் கருதப்பட்டு அன்றைய தினம் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் உரிமம் பெற்ற ஏனைய அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்படும்.

அதேபோல், அன்றைய தினம் இறைச்சிக்கான விலங்குகளை வெட்டும் இடங்கள் மற்றும் இறைச்சிக் கடைகளை மூடுமாறும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் பணிப்புரை விடுத்துள்ளதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.