தமிழ் ஓசை
தமிழ் ஓசை

நாங்க இருவருமே வெற்றியாளர்கள் தான். இறுதிப்போட்டிக்கு முன் டேவிட் வார்னர் – பகிர்ந்த வைரல் பதிவு

0 267

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியானது தற்போது துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் மோதுகின்றன. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி முதல் முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றும் என்பதினால் இந்த போட்டியில் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இந்த போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை பெறப்போவது யார் ? என்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டு உள்ளது.

அதற்கு பதிலளித்துள்ள ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரர் டேவிட் வார்னர் குறிப்பிடுகையில் : நாங்கள் இருவருமே வின்னர்கள் தான் என்று குறிப்பிட்டு உள்ளார். வார்னரின் இந்த ரிப்ளைக்கு காரணம் யாதெனில் : ரசிகர் ஒருவர் வார்னர் மற்றும் கேன் வில்லியம்சன் ஆகியோர் சன் ரைசர்ஸ் அணிக்காக ஒன்றாக விளையாடுவதால் யார் வெற்றி பெறுவார்கள் ? என்று கணிக்க முடியவில்லை என்று பதிலளித்திருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.