தமிழ் ஓசை
தமிழ் ஓசை

நாங்கள் யாருக்கும் இழப்பீடு வழங்கவில்லை – சீனாவுடனான சமரசம் குறித்து அமைச்சர் விளக்கம்

0 111

நிராகரிக்கப்பட்ட சீன உரத்திற்கு இழப்பீடாக 6.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை வழங்கவில்லை என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

நிராகரிக்கப்பட்ட தரமற்ற உரம் தொடர்பில் வர்த்தக மேல் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு தொடர்பாக சட்டமா அதிபரின் ஆலோசனையின் அடிப்படையில் சமரச தீர்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக கூறினார்.

கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர், இதன் காரணமாக எந்தவொரு நிதி மோசடியோ அல்லது குற்றமோ இடம்பெறவில்லை என மேலும் தெரிவித்தார்.

மேலும் உரத்தின் தரம் குறித்து ஆய்வு செய்த அதிகாரிகள் தரப்பில் எந்த தவறும் இடம்பெறவில்லை என்றும் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.