தமிழ் ஓசை
தமிழ் ஓசை

நவம்பரில் 3 ஆம் கட்டத் தடுப்பூசி: யாருக்கு முன்னுரிமை தெரியுமா?

0 56

நாட்டில் மூன்றாம் கட்ட தடுப்பூசி வழங்கும் பணிகளை நவம்பர் மாதம் முதல் ஆரம்பிப்பதற்கான வேலைத்திட்டங்கள் தயார்ப்படுத்தப்பட்டுள்ளன என்று ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

இதன்போது 60 வயதுக்கு மேற்பட்டோர், சுகாதாரத்துறை, பாதுகாப்புத் தரப்பினர் உள்ளிட்ட கொவிட் ஒழிப்பில் முன்னிலை வகிப்பவர்களுக்கு முன்னுரிமையளிக்கப்படும்  என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:

60 வயதுக்கு மேற்பட்டோர், சுகாதாரத்துறை, முப்படையினர், பொலிஸார் உள்ளிட்ட கொவிட் ஒழிப்பு செயற்பாடுகளில் முன்னிலையிலுள்ளவர்கள், சுற்றுலாத்துறையுடன் தொடர்புடையவர்கள், விமான நிலைய ஊழியர்கள் உள்ளிட்ட தரப்பினருக்கே மூன்றாம் கட்ட தடுப்பூசி வழங்கலின் போது முன்னுரிமையளிக்கப்படும்.

அதன் பின்னர் படிமுறையாக விசேட தேவையுடையவர்கள் மற்றும் ஏனையோருக்கு மூன்றாம் கட்ட தடுப்பூசி வழங்கப்படும்.

இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்கப்பட்டு 6 மாதங்களின் பின்னரே மூன்றாம் கட்ட தடுப்பூசி வழங்கப்பட வேண்டும்.

அதற்கமைய நவம்பர் மாதம் முதல் இதற்கான வேலைத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கான சகல ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளன என அவர் மேலும் தெரிவித்தார். 

Leave A Reply

Your email address will not be published.