தமிழ் ஓசை
தமிழ் ஓசை

நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவம் இன்றுடன் நிறைவு

0 39

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் இறுதி நாள் திருவிழாவாக இன்றைய நாள் அமைந்துள்ளது.

அதன்படி, இன்று மாலை 5 மணிக்கு வைரவர் உற்சவம் நடைபெறவுள்ளது.

நேற்றைய தினம் 26ஆம் நாள் பூங்காவன பூஜை நிகழ்வுகள் விமர்சையாக இடம்பெற்றன.

நாட்டின் பல பாகங்களில் இருந்தும் , வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் இதில் கலந்து கொண்டிருந்தனர்.

நல்லூர் கந்தனின் மகோற்சவம் கடந்த ஆகஸ்ட் மாதம் 21ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, மகோற்சவ திருவிழாக்கள் சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன, மத , ஜாதி பேதமின்றி அனைவரும் நல்லூர் கந்தனை தரிசிக்க வருகை தந்திருந்தனர்.

மேலும், நல்லூர் ஆலயத்தின் 2023ஆம் ஆண்டுக்கான வருடாந்த மகோற்சவம் இன்று இடம்பெறவுள்ள வைரவர் உற்சவத்துடன் நிறைவு பெறவுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.