Developed by - Tamilosai
இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், கந்தசஷ்டி விரத புண்ணிய காலத்தில், ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் மணிமண்டபத்தில், மாலை மூன்று தொடக்கம் நான்கு மணிவரை முருக பக்திப் பாடல்கள் இசை அர்ச்சனை நிகழ்வு இடம்பெற்று வருகிறது.
இரண்டாம் நாள் நிகழ்விலே இளம் சைவப்புலவர், திருமுறை நெறிச்செல்வர் ஜெயராசா அருள்தாஸ் குழுவினரின் ‘முருக பக்திப் பாடல்கள்’ இசை நிகழ்வு இடம்பெற்றது.
அணிசேர் கலைஞர்களாக வயலின் – ந.குலதீபன் அவர்களும் மிருதங்கம் – அ.சண்முகப்பிரியன் அவர்களும் கஞ்சிரா – ப.கௌரீசன் அவர்களும் பங்குபற்றினர்.