Developed by - Tamilosai
யாழ்ப்பாணத்திலுள்ள இராசதானி காலத்து தொன்மங்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவின் யாழ். விஜயத்தின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனால் இவ்வாறு எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
இதன்படி நல்லூர் மந்திரிமனை, சங்கிலியன் சிலை, யமுனா ஏரி உள்ளிட்டவற்றைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை அவர் குறிப்பிட்டார்.
இலங்கையில் நீண்டகாலமாக மக்கள் வாழ்ந்தமைக்கான சான்றுகளை கொண்ட யாழ்ப்பாணம் மாவட்டமானது, ஏராளமான தொன்மங்களைக் கொண்டுள்ளது.
அவற்றைப் பாதுகாப்பது எமது மூதாதையருக்கும், அடுத்துவரும் சந்ததிக்கும் நாம் செய்யும் கடமை என அங்கஜன் இராமநாதன் குறிப்பிட்டார்.