Developed by - Tamilosai
பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத நிலையிலும் நல்லாட்சி அரசாங்கம் செலுத்த வேண்டிய கடனை செலுத்த அன்று கோட்டாபய ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்ததாக ஆளும் தரப்பு பிரதம கொறடா, நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப் பிரகடனத்திற்கு அமைவாக வீதிகள் மற்றும் நெடுஞ்சாலைகளுக்கு போக்குவரத்து நெரிசலின்றி இலகுவாக செல்லக் கூடிய வகையில் அனைத்து உள்ளக மற்றும் கிராமிய வீதிகள் 100,000 கிலோமீற்றர் அபிவிருத்தி செய்யும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நிறைவு செய்யப்பட்ட 1500 வீதிகள் ´சுபீட்சத்தின் வீதிப் புரட்சி.
பல ஆயிரம் வீதிகள் பூர்த்தியான நாள் ´ எனும் தொனிப்பொருளின் கீழ் ஒரே நாளில் மக்களிடம் கையளிக்கும் ஆரம்ப வைபவம் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் தலைமையில் வீரகெட்டிய மைதானத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ஜனாதிபதி அவர்களே, உங்களால் முன்வைக்கப்பட்ட சுபீட்ச நோக்கு கொள்கைப் பிரகடனத்தில் 100,000 கிலோ மீற்றர் வீதிகள் அபிவிருத்தி செய்யப்படும் என இந்நாட்டு மக்களுக்கு உறுதியளிக்கப்பட்டிருந்தது.
நீங்கள் இந்த நாட்டின் ஜனாதிபதியாக பொறுப்பேற்ற மூன்று மாதங்களுக்குள், உங்களுக்கு கொவிட் தொற்றுநோயை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
அப்போது உங்களுக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை. ஜனநாயகத்தின் முக்கிய அங்கமான பாராளுமன்றத் தேர்தலை நடத்த முடிவு செய்தபோது, தேர்தலை நிறுத்தக் கோரி எதிரணியினர் நீதிமன்றத்துக்கும் சென்றனர்.
பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத நிலையிலும் நல்லாட்சி அரசாங்கம் செலுத்த வேண்டிய கடனை மீளச்செலுத்த நடவடிக்கை எடுத்தீர்கள்.
கொவிட் நெருக்கடியால் நாட்டின் அபிவிருத்திப் பணிகளைத் நிறுத்த நீங்கள் ஒருபோதும் நடவடிக்கை எடுக்கவில்லை. மக்கள் தங்கள் இடுப்புப் பட்டிகளை இறுக்கிக் கொள்ள வரலாற்றில் சில அரசாங்கத் தலைவர்கள் அழைப்பு விடுத்தார்கள்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யுத்தத்தை முன்னெடுத்துச் சென்றவாறே நாட்டின் அபிவிருத்தி செயற்பாடுகளை தொடர்ந்தார். நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தினார்.