Developed by - Tamilosai
துறைமுகங்களை நிர்மாணித்து இந்த நாட்டை கடல்சார் கேந்திர நிலையமாக மாற்றி ஆசியாவின் பலம் வாய்ந்த நாடாக முன்னோக்கி செல்வோம் என்ற நம்பிக்கையை நாம் கைவிடவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
தெற்காசியாவின் கடல்சார் கேந்திர நிலையமான கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தின் நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்வில் இன்று (12) முற்பகல் கலந்து கொண்டு உரையாற்றிய போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு குறிப்பிட்டார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால் கிழக்கு முனையத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்படுவதனை குறிக்கும் வகையிலான நினைவு பலகை திறந்து வைக்கப்பட்டதுடன், நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைக்கப்பட்டன. குறித்த சந்தர்ப்பத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன ஆகியோரும் கலந்துகொண்டனர்.