Developed by - Tamilosai
நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் திகதி குறித்து தீர்மானிக்க பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழுவின் விசேட கூட்டம் இன்று (09) நடைபெறவுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று காலை 10.00 மணிக்கு கட்சித் தலைமைக் கூட்டம் நடைபெற உள்ளது.
அத்துடன் நாட்டில் தற்போது எழுந்துள்ள பிரச்சினைகள் மற்றும் கடந்த 6 ஆம் திகதி பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சம்பவம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடவுள்ளனர்