தமிழ் ஓசை
தமிழ் ஓசை

நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரிக்க இரு நிபந்தனைகள்

0 451

கோட்டாபய ராஜபக்ஷவின் அரசுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரிக்க இரண்டு நிபந்தனைகளை 11 சுயாதீனக் கட்சிகளின் கூட்டணி முன்வைத்துள்ளது.

இது தொடர்பில் பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில எம்.பி. ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டுள்ளார்.

“கோட்டாபய அரசுக்கு ஆதரவாக தற்போது 117 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.

எனவே, நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைத்தால் அது தோல்வி அடையும். அதன்மூலம் அரசு பலமடையும்.

எனவே, 113 உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதை ஐக்கிய மக்கள் சக்தி உறுதிப்படுத்த வேண்டுமெனவும், சர்வகட்சி இடைக்கால அரசமைக்க ஆதரவு வழங்க வேண்டும்.

இவ்விரு நிபந்தனைகளும் நிறைவேற்றப்பட்டால், பிரேரணையை ஆதரிக்க நாம் தயார் என உதய கம்மன்பில எம்.பி. குறிப்பிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.