தமிழ் ஓசை
தமிழ் ஓசை

நபர் ஒருவரை தாக்கிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் இடமாற்றம்!

0 200

 சமூக வலைத்தளங்களில் பரவி வரும் பொலிஸ் அதிகாரி ஒருவர் நபர் ஒருவரைத் தாக்கும் காணொலியுடன் தொடர்புடைய சப்ரகமுவ சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரன்மல் கொடிதுவக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.

அவர் வைத்திய சேவைகள் மற்றும் நலன்புரி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக இடமாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸ் அதிகாரியின் தவறான நடத்தை தொடர்பில் விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக  பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.