Developed by - Tamilosai
நனோ நைட்ரஜன் மூலத்துடன் கூடிய விஷேட திரவ உரத்தை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.விவசாயத் துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இதனைத் தெரிவித்துள்ளார்.
9 இலட்சம் ஹெக்டேருக்குத் தேவையான திரவு உரத்திற்கே இவ்வாறு அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை, நைட்ரஜன் மூலத்துடன் கூடிய 3.1 மில்லியன் லீற்றர் விஷேட திரவ உரத்தை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் அதன் முதல் தொகுதியாக ஒரு இலட்சம் லீற்றர் விஷேட திரவ உரம் இன்றைய தினம் இலங்கைக்குக் கொண்டு வரப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.