Developed by - Tamilosai
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் நனோ நைட்ரஜன் திரவ உரத்தின் அடுத்த தொகுதி நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, குறித்த உரத் தொகுதி இன்று (வியாழக்கிழமை) நாட்டிற்கு கிடைக்கப்பெறவுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் உதித் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
இதேநேரம், ஏதேனும் அவசர நிலை ஏற்படுமாயின் விவசாயத்திற்குப் பொருத்தமான கிருமி நாசினியை வழங்குவதற்கு அறிவியல் ரீதியில் ஆராய்வது குறித்து கலந்துரையாடி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கடந்த 24ஆம் திகதி இந்தியாவிலிருந்து ஒரு தொகுதி நனோ நைட்ரஜன் திரவ உரம் நாட்டிற்குக் கொண்டுவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.