Developed by - Tamilosai
திரவ நனோ நைட்ரஜன் உர இறக்குமதியில் பாரிய மோசடி இடம்பெற்றிருக்கின்றது.
அந்த உரம் அடங்கிய போத்தலொன்றை 1393 ரூபாவிற்குக் கொள்வனவு செய்யக்கூடிய வாய்ப்பு காணப்பட்ட போதிலும், அதனை அரசாங்கம் 2500 ரூபாவிற்குக் கொள்வனவு செய்திருக்கின்றது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க குற்றம்சாட்டியுள்ளார்.
எனவே இந்த உர இறக்குமதியில் சுமார் 300 கோடி ரூபா மேலதிகமாகச் செலவிடப்பட்டிருக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதுமாத்திரமன்றி ஏற்கனவே லிதுவேனியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொட்டாசியம் குளோரைட்டு உரம் மற்றும் தற்போது இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டிருக்கின்ற திரவ நனோ நைட்ரஜன் உரம் என்பன உரியவாறான ஆய்வுகூடப்பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக்காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.