Developed by - Tamilosai
நாட்டின் தற்போதைய நிலைமைகளுக்கமைய வருடாந்த இழப்பு 15 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் ரயில் போக்குவரத்து கட்டணங்கள் அதிகரிக்கப்படாமை உள்ளிட்ட காரணங்களினால் இவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ரயில் போக்குவரத்து கட்டணங்கள் அதிகரிக்கப்படாத நிலையில், பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பானது திணைக்களத்திற்கு ஏற்பட்டுள்ள நட்டத்தை ஈடுசெய்ய போதுமானதாக இருக்காது எனவும் ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.