Developed by - Tamilosai
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான பாடகிகளில் ஒருவர் சின்மயி. பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடியுள்ள இவர் டப்பிங் கலைஞராகவும் இருக்கிறார்.
நடிகைகள் சமந்தா, காஜல் அகர்வால், தமன்னா என பல நடிகைகளுக்கு டப்பிங் பேசியுள்ள இவர் தெலுங்கிலும் இதே பணியை செய்கிறார். தெலுங்கில் நடிகை சமந்தாவிற்கு தொடர்ந்து டப்பிங் பேசி வந்தவர் சின்மயி.
இதுகுறித்து பாடகி சின்மயி, தெலுங்கு சினிமாவில் டப்பிங் கலைஞராக என் பயணம் முடிவடையும் என்று நினைக்கிறேன். என் சிறந்த தோழி சமந்தா தனது கதாபாத்திரங்களுக்கு அவரே பேசி வருகிறார்.
அவருக்கு பின்னணி பேசும் வாய்ப்பு எனக்கு கிடையாது, அவருடனான டப்பிங் பயணம் முடிந்துவிட்டது என தெரிவித்திருக்கிறார்.