Developed by - Tamilosai
பிரபல மலையாள நடிகர் சரத் சந்திரன் திடீரென மரணமடைந்துள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அங்மாலி டைரிஸ் படத்தின் மூலம் பிரபலமானவர் சரத் சந்திரன். இவர் கொச்சியில் உள்ள தனது வசிப்பிடத்தில் இறந்த நிலையில் இருந்துள்ளார்.
அவரது மரணத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இதனிடேயை நடிகர் சரத் சந்திரனின் மரணம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பின்னணி குரல் கொடுப்பவராக திரையுலகில் அடியெடுத்து வைத்த சரத் சந்திரன், அனீஸ்யா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். மேலும் கூடே, ஒரு மெக்ஸிகன் அபரதா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.