தமிழ் ஓசை
தமிழ் ஓசை

தொழில் வாய்ப்புக்கள் தொடர்பில் சமூக ஊடகங்களில் போலியான தகவல்கள்

0 263

கனடாவில் தொழில் வாய்ப்புக்கள் குறித்து சமூக ஊடகங்களில் வெளியாகி வரும் தகவல்கள் தொடர்பில் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகராலயம் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் தமது கருத்தினை டுவிட்டர் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அந்தப் பதிவில்,

தொழில் வாய்ப்புக்கள் தொடர்பில் சமூக ஊடகங்களில் போலியான தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்றது.

“Government of Canada recruitment campaign 2022” 2022ம் ஆண்டுக்கான கனேடிய அரசாங்க தொழில் வாய்ப்பு என்ற தொனிப் பொருளில் செய்யப்பட்டு வரும் விளம்பரம் போலியானது. 

உடனடி வேலை வாய்ப்பு வழங்கப்படும் என வெளியாகி வரும் தகவல்களில் உண்மையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடிவரவு குறித்த மோசடிகள் மற்றும் போலி வெளிநாட்டுத் தொழில் வாய்ப்புக்கள் பற்றிய விளம்பரங்கள் குறித்து மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும் என்றும் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகராலயம் மேலும் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.