தமிழ் ஓசை
தமிழ் ஓசை

தொலைபேசிக்காக செய்யப்பட்ட படுகொலை!

0 45

கொழும்பின் புறநகர் பகுதியான ராமகவில் நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

கையடக்கத் தொலைபேசி திருடப்பட்டமை தொடர்பில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன் அவரது இரு மகன்களும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் கெந்தலியத்தபாலுவ பிரதேசத்தை சேர்ந்த 55 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அந்த நபரின் கையடக்கத் தொலைபேசியை நபர் ஒருவர் திருடிச் சென்றுள்ளதுடன், அது தொடர்பில் விசாரிக்கச் சென்ற போது சந்தேகநபர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலைச் செய்துள்ளார்.

பின்னர் தலையிட்ட இரண்டு மகன்களையும் தாக்கியதில் அவர்கள் காயமடைந்து தற்போது ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.