Developed by - Tamilosai
இலங்கையில் தொலைத்தொடர்பு வரி இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.
அதற்கமைய தொலைத்தொடர்பு வரி 11.25 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக அதிகரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் பெறுமதி சேர் வரி 12 வீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் தொலைத்தொடர்பு வரித் திருத்தம் அமுலாக்கப்படவுள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.