தமிழ் ஓசை
தமிழ் ஓசை

தொற்றுக்குள்ளான கர்ப்பிணி பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

0 195

நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் கர்பிணிப் பெண்களின் எண்ணிக்கை அதிவேகமாக அதிகரித்து வருவதாக மகப்பேறு மருத்துவர் சனத் லானேரோல் தெரிவித்துள்ளார்.

இதனால் கர்ப்பிணிப் பெண்கள் விரைவில் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அத்தோடு தடுப்பூசிகள் பிறக்காத குழந்தைகளுக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தாது என்றும் மருத்துவர் குறிப்பிட்டார்.

இதேவேளை வேலைக்கு செல்லும் கர்ப்பிணிப் பெண்கள் முடிந்தால், வீட்டிலிருந்து வேலை செய்யுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

Leave A Reply

Your email address will not be published.