Developed by - Tamilosai
தேர்தல் விதிமுறைகளை சட்டப்பூர்வமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணையகம் தெரிவித்துள்ளது.
தேர்தல் காலங்களில் விதிமுறைகள் வர்த்தமானி ஊடாக வௌியிடப்படுவதாகவும் அவற்றை மீறுபவர்களுக்கு எதிராக எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை என்றும் அந்த ஆணையகம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு விதிமுறைகளை மீறுவதை குற்றமாகக் கருத்திற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
எனவே, தேர்தல் விதிமுறைகளை சட்டப்பூர்வமாக்கத் தீர்மானிக்கப்பட்டதாக தேர்தல்கள் ஆணையகம் தெரிவித்துள்ளது.