தமிழ் ஓசை
தமிழ் ஓசை

தேர்தல் முறை மாற்றம்

0 442

அமைச்சுசார் ஆலோசணைக்குழுக்கள் உள்ளிட்ட பல நாடாளுமன்றக் குழுக்கள் இவ்வாரம் கூடவுள்ளன.

அதற்கமைய, தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளங் காண்பதற்கும் தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்குமான நாடாளுமன்றத் விசேட குழு 24 ஆம் திகதி கூடவுள்ளது.

மேலும், இன்று (22) வலுசக்தி அமைச்சுசார் ஆலோசனைக்குழு, விவசாய அமைச்சுசார் ஆலோசனைக்குழு, வனசீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சுசார் ஆலோசனைக்குழு என்பன கூடவுள்ளன. நாளை (23) தொழில் அமைச்சுசார் ஆலோசனைக்குழு மற்றும் காணி அமைச்சுசார் ஆலோசனைக்குழு என்பன கூடவுள்ளன.

இதேவேளை, பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் கூட்டமும் இன்று (22) நடைபெறவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.