தமிழ் ஓசை
தமிழ் ஓசை

தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து: சீனா ரெலிகொம் நிறுவனத்தின் அனுமதி ரத்து – அமெரிக்கா அதிரடி

0 217

சீனாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனம் ஒன்றின் அனுமதியை தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்ற காரணத்தை சுட்டிக்காட்டி அமெரிக்கா இரத்துச் செய்துள்ளது.

எனவே, சீனா ரெலிகொம் என்ற குறித்த  தொலைத்தொடர்பு நிறுவனம் அமெரிக்காவில் சேவை வழங்குவதை 60 நாட்களுக்குள் நிறுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சீன அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள நிறுவனம் அமெரிக்கத் தொலைத்தொடர்புகள் குறித்த தகவல்களை சீன அரசு சேமிக்க, இடைமறிக்க, திசை திருப்ப உதவியதாக அமெரிக்க அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

அத்தோடு இந்தத் தொலைத்தொடர்பு நிறுவனம் அமெரிக்காவுக்கு எதிராக உளவு பார்க்கும் சதி மற்றும் பிற தீங்கான நடவடிக்கைகளுக்கு அனுமதிக்கலாம் என்றும் அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

இருப்பினும் அமெரிக்காவில் கடந்த 20 வருடங்களாக தொலைத்தொடர்பு சேவையை வழங்கி வந்த அந்த நிறுவனம் அமெரிக்காவின் இந்த முடிவு ஏமாற்றமளிப்பதாகத் தெரிவித்துள்ளது.

110 நாடுகளில் நூற்றுக்கணக்கான மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள குறித்த நிறுவனம், இணைய வசதி முதல் பல சேவைகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.