தமிழ் ஓசை
தமிழ் ஓசை

தெல்லிப்பழையில் சகோதரனுடன் சென்ற பெண் கடத்தல்!

0 140

 யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை பகுதியில் சகோதரனுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இளம் பெண்ணொருவர் வானில் வந்த கும்பலால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.

தெல்லிப்பழை பகுதியில் நேற்றைய தினம் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தெல்லிப்பழை வைத்தியசாலையில் பணிபுரியும் குறித்த பெண் தனது சகோதரனுடன், மோட்டார் சைக்கிளில்  சென்று கொண்டிருந்தபோது, ஹயஸ் ரக வாகனத்தில் வந்த கும்பல் ஒன்று சகோதரன் மீது தாக்குதலை மேற்கொண்டு விட்டு, பெண்ணைக் கடத்திச் சென்றுள்ளதாக அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக தெல்லிப்பழை பொலிஸார் மெலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.