தமிழ் ஓசை
தமிழ் ஓசை

தென்கிழக்கு ஆசியா மீது சீனா ஆதிக்கம் செலுத்தாது – சீன அதிபர் ஜின்பிங்

0 280

“ஆசியான்” என்று அழைக்கப்படும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கத்துக்கும், சீனாவுக்கும் இடையிலான 30 ஆண்டுகால உறவை குறிக்கும் வகையில் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற மாநாட்டில் சீன அதிபர் ஜின்பிங் கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார்.

அப்போது அவர் தென்கிழக்கு ஆசியா மீது சீனா ஆதிக்கம் செலுத்தாது. சீனா மேலாதிக்கம் மற்றும் அதிகார அரசியலை உறுதியுடன் எதிர்க்கிறது.

அண்டை நாடுகளுடன் நட்புறவைப் பேண விரும்புகிறது மற்றும் பிராந்தியத்தில் நிலையான அமைதியை கூட்டாக வளர்க்க விரும்புகிறது. தென்கிழக்கு ஆசியாவில் ஆதிக்கம் செலுத்த முயற்சி செய்யாது. சிறியவர்களை கொடுமைப்படுத்தாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தென்கிழக்கு ஆசியாவில் சீனா தனது அதிகாரத்தை விரிவுபடுத்த முயற்சித்து வருவதாக அந்த பிராந்தியத்தில் உள்ள மற்ற நாடுகள் தொடர்ந்து கவலை தெரிவித்து வருகின்றன. குறிப்பாக தென்சீன கடல் விவகாரத்தில் சீனவுக்கும், பிராந்தியத்தின் மற்ற நாடுகளுக்கும் இடையில்பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறமை குறிப்பிடத்தக்கது. 

Leave A Reply

Your email address will not be published.